வியாழன், 8 ஏப்ரல், 2010

ஒக்கலிக்கவுண்டர்:களஞ்சியம்

ஒக்கலிக்கவுண்டர் ஜாதி தமிழ்நாடு, கர்நாடகா, மற்றும் ஆந்திரா மாநிலங்களில் வசிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க சமூகம் ஆகும். கர்நாடகாவில் வாழும் [சுமார் 5கோடி மக்கள் தொகையில் 15% ஒக்கலிகர்] இரண்டாவது பெரிய சமுதாயம் ஆகும்.தமிழ்நாட்டில் தேனி, மதுரை, திண்டுக்கல், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கும் சமூகத்தினர்,
ஒக்கலிக் கவுண்டர்,ஒக்கலிகர்,வொக்கலிகர்,கவுடர்என்றும் அழைக்கப்படுகின்றனர்.

'ஒக்கலிகர்' என்றால் 'குடியானவன்' என்று பொருள்.இவர்கள் ஆரியர் அல்லாத திராவிடர் இனத்தை சேர்ந்தவர்களாவர்.விவசாயத்தைக் குலத்தொழிலாக கொண்ட இவர்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்று சொன்னாலும் உண்மையில் இவர்கள் மேற்குத்தொடர்ச்சி மலையை பகுதியை ஒட்டி வாழ்பவர்கள்.மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மாட்டிக்கொண்டவர்கள்.நீலகிரி மலையில் வாழும் 'படுகர்' இனத்தவரும் ஒக்கலிகர் ஜாதியின் ஒரு பிரிவுதான்.
கர்நாடகாவில் கவுடர் என்ற பெயரை குரும்பர்,லிங்காயத்,இடிகா,திகால,உப்பாரா,போன்ற ஜாதியினரும் பயன் படுத்துகின்றனர்.ஆனாலும் கவுடர் என்பது பொதுவாக ஒக்கலிகர் ஜாதியினரையே குறிக்கும்.
முதலாம் கெம்பேகவுடர் மற்றும் இரண்டாம் கெம்பேகவுடர் [பெங்களுருவை நிறுவியவர்] கர்நாடகாவை ஆண்டுள்ளனர்.

* இவர்கள் சமூகத்தில், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் திருமணத்தில் பெண்களுக்கு தாலி அணியும் வழக்கம் இல்லை. ஆனால் கோவை, ஈரோடு மாவட்டங்களில் தாலி அணிகிறார்கள்.
* "ஊர்கவுண்டர் நல்லா இருந்தா ஊரு நல்லா இருக்கும்" என்பது இவர்களின் நம்பிக்கை. ஊர் கவுண்டர், "நாட்டாமை" என அழைக்கப்படும் இவர்களின் தலைவர் இச்சமுதாயத்தின் அனைத்து விழாக்களின் போதும் முன் நிறுத்தப்படுவார். இச்சமூக மக்களின் பிரச்சனை, இச்சமூக மக்களுக்குள் பாகப்பிரிவினை என எந்த பிரச்சனையிலும் அந்தந்த ஊரிலுள்ள இச்சமூகத் தலைவர் யாரும் பாதிக்காதவாறு நடுநிலையான தீர்ப்பு வழங்குவார். இவரின் தீர்ப்புக்கு இச்சமூகத்தினர் கட்டுப்படுகின்றனர்.

ஒக்கலிகர் ஜாதிக்குள் 102 உட்பிரிவுகள் உள்ளன. அவற்றில் சில:

* மொரசு ஒக்கலிகர்
* குஞ்சுடிக ஒக்கலிகர்
* ரோதாகாரு ஒக்கலிகர்
* ஹலிகார் ஒக்கலிகர்
* ரெட்டி ஒக்கலிகர் [ஆந்திரா]
* குடி ஒக்கலிகர்
* க்ராமா ஒக்கலிகர்
* சோழ ஒக்கலிகர்
* கீரைகார ஒக்கலிகர்
* தரப்பாடி ஒக்கலிகர்
* காப்பு ஒக்கலிகர்
* நம்தாரி ஒக்கலிகர்
* முசுக்கு ஒக்கலிகர்
* நொனப ஒக்கலிகர்
* கோட்டே ஒக்கலிகர்
* ஹலாக்கி ஒக்கலிகர்
* உப்பில கொலகா ஒக்கலிகர்
* தாச ஒக்கலிகர்
* ஹொசதேவரு ஒக்கலிகர்
* ஜொகி ஒக்கலிகர்
* செட்டி ஒக்கலிகர்
* கொடவா ஒக்கலிகர்
* கங்கட்கர்/கங்கடிகர் (கங்க சத்ரியா) ஒக்கலிகர்.

சில மாநிலங்களில் பண்ட்ஸ், ரெட்டி, பட்டேல்,ஜாட்டுஎன அழைக்கப்படுகிறார்கள்.

முக்கியப் பிரமுகர்

* நீதியரசர் முருகேசன், உயர்நீதிமன்ற நீதிபதி
* டாக்டர் சிவசாமி கவுண்டர்,MBBS,[தலைவர்,தமிழக விவசாயிகள் சங்கம்]
* ஓ ஆறுமுகசாமி கவுண்டர்,தொழில்அதிபர்
* R.வெள்ளிங்கிரி, [DSP ஓய்வு]

அரசியல் பங்களிப்பு

* தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த மறைந்த என்.நடராஜன் என்பவர் பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.

* தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த ஆர்.டி.கோபால் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.

* தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த என்.ராமகிருஷ்ணன் (மறைந்த என்.நடராஜன் சகோதரர்) கம்பம் சட்டமன்ற உறுப்பி்னராக இருந்து வருகிறார்.

* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த டி.டி.எஸ் திப்பையா அவர்கள் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.

* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த எம் சின்னராஜ் அவர்கள் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.

* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஏ.கே செல்வராஜ் அவர்கள் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.

* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த.கே.சின்ராஜ் அவர்கள் தற்போது மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினராக இருந்துவருகிறார்.

திரைப்படத் துறை பங்களிப்பு

தமிழ்த் திரைப்படங்களிலும் இச்சமூகத்தைச் சேர்ந்த சிலர் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளனர். அவர்களில் சிலர்;

* திரைப்பட இயக்குனர் ஆர். வி. உதயக்குமார்
* திரைப்பட தயாரிப்பு நிர்வாகி மற்றும் தயாரிப்பாளர் மல்லியம்பட்டி S மாதவன்
* திரைப்பட நடிகர் பீலிசிவம்
* திரைப்பட நடிகர் வெள்ளை சுப்பையா

ஒக்கலிகர் கல்வி நிறுவனங்கள்

ஒக்கலிகர் சமுதாயத்தின் / சமுதாயத்தைச் சேர்ந்தவரின் நிர்வாகத்திலுள்ள சில கல்வி நிறுவனங்கள்.

* ஆதி சுஞ்சனகிரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கம்பம்
* என்.எஸ்.கே.பொன்னையா கவுடர் மேல்நிலைப்பள்ளி, கூடலூர்.
* நஞ்சையன் லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, மேட்டுப்பாளையம்
* ஆதித்யா பொறியியற் கல்லூரி, கோயமுத்தூர்
* ஸ்ரீ விஜயலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிறுமுகை
* தி.துரைசாமி கவுண்டர் மேல்நிலைப்பள்ளி,சீளியூர்,கோவை மாவட்டம்
* தாசப்ப கவுண்டர் மாணவர்கள் தர்ம விடுதி, கோபி்செட்டிபாளையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.