செப் 3-2009 அன்று பெரியகுளம் அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியில் காமுகுல ஒக்கலிகர் உண்டியோர் குல பங்காளிகளுக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீ வீரு தங்கம்மாள், ஸ்ரீ சந்தனம்மாள், ஸ்ரீ பெருமாள் சுவாமிகள் அடங்கிய அருள்மிகு பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி, தீபாராதனைகள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலையில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இவ்விழாவில் தேனி மாவட்ட ஆட்சியர் பி.முத்துவீரன், பெரியகுளம் கோட்டாட்சியர் எம்.சுப்பிரமணியன், தாசில்தார் பி.குமரேஸ்வரன் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை காமுகுல ஒக்கலிகர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.