வியாழன், 8 ஏப்ரல், 2010

ஒக்கலிக்கவுண்டர்:களஞ்சியம்

ஒக்கலிக்கவுண்டர் ஜாதி தமிழ்நாடு, கர்நாடகா, மற்றும் ஆந்திரா மாநிலங்களில் வசிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க சமூகம் ஆகும். கர்நாடகாவில் வாழும் [சுமார் 5கோடி மக்கள் தொகையில் 15% ஒக்கலிகர்] இரண்டாவது பெரிய சமுதாயம் ஆகும்.தமிழ்நாட்டில் தேனி, மதுரை, திண்டுக்கல், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கும் சமூகத்தினர்,
ஒக்கலிக் கவுண்டர்,ஒக்கலிகர்,வொக்கலிகர்,கவுடர்என்றும் அழைக்கப்படுகின்றனர்.

'ஒக்கலிகர்' என்றால் 'குடியானவன்' என்று பொருள்.இவர்கள் ஆரியர் அல்லாத திராவிடர் இனத்தை சேர்ந்தவர்களாவர்.விவசாயத்தைக் குலத்தொழிலாக கொண்ட இவர்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்று சொன்னாலும் உண்மையில் இவர்கள் மேற்குத்தொடர்ச்சி மலையை பகுதியை ஒட்டி வாழ்பவர்கள்.மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மாட்டிக்கொண்டவர்கள்.நீலகிரி மலையில் வாழும் 'படுகர்' இனத்தவரும் ஒக்கலிகர் ஜாதியின் ஒரு பிரிவுதான்.
கர்நாடகாவில் கவுடர் என்ற பெயரை குரும்பர்,லிங்காயத்,இடிகா,திகால,உப்பாரா,போன்ற ஜாதியினரும் பயன் படுத்துகின்றனர்.ஆனாலும் கவுடர் என்பது பொதுவாக ஒக்கலிகர் ஜாதியினரையே குறிக்கும்.
முதலாம் கெம்பேகவுடர் மற்றும் இரண்டாம் கெம்பேகவுடர் [பெங்களுருவை நிறுவியவர்] கர்நாடகாவை ஆண்டுள்ளனர்.

* இவர்கள் சமூகத்தில், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் திருமணத்தில் பெண்களுக்கு தாலி அணியும் வழக்கம் இல்லை. ஆனால் கோவை, ஈரோடு மாவட்டங்களில் தாலி அணிகிறார்கள்.
* "ஊர்கவுண்டர் நல்லா இருந்தா ஊரு நல்லா இருக்கும்" என்பது இவர்களின் நம்பிக்கை. ஊர் கவுண்டர், "நாட்டாமை" என அழைக்கப்படும் இவர்களின் தலைவர் இச்சமுதாயத்தின் அனைத்து விழாக்களின் போதும் முன் நிறுத்தப்படுவார். இச்சமூக மக்களின் பிரச்சனை, இச்சமூக மக்களுக்குள் பாகப்பிரிவினை என எந்த பிரச்சனையிலும் அந்தந்த ஊரிலுள்ள இச்சமூகத் தலைவர் யாரும் பாதிக்காதவாறு நடுநிலையான தீர்ப்பு வழங்குவார். இவரின் தீர்ப்புக்கு இச்சமூகத்தினர் கட்டுப்படுகின்றனர்.

ஒக்கலிகர் ஜாதிக்குள் 102 உட்பிரிவுகள் உள்ளன. அவற்றில் சில:

* மொரசு ஒக்கலிகர்
* குஞ்சுடிக ஒக்கலிகர்
* ரோதாகாரு ஒக்கலிகர்
* ஹலிகார் ஒக்கலிகர்
* ரெட்டி ஒக்கலிகர் [ஆந்திரா]
* குடி ஒக்கலிகர்
* க்ராமா ஒக்கலிகர்
* சோழ ஒக்கலிகர்
* கீரைகார ஒக்கலிகர்
* தரப்பாடி ஒக்கலிகர்
* காப்பு ஒக்கலிகர்
* நம்தாரி ஒக்கலிகர்
* முசுக்கு ஒக்கலிகர்
* நொனப ஒக்கலிகர்
* கோட்டே ஒக்கலிகர்
* ஹலாக்கி ஒக்கலிகர்
* உப்பில கொலகா ஒக்கலிகர்
* தாச ஒக்கலிகர்
* ஹொசதேவரு ஒக்கலிகர்
* ஜொகி ஒக்கலிகர்
* செட்டி ஒக்கலிகர்
* கொடவா ஒக்கலிகர்
* கங்கட்கர்/கங்கடிகர் (கங்க சத்ரியா) ஒக்கலிகர்.

சில மாநிலங்களில் பண்ட்ஸ், ரெட்டி, பட்டேல்,ஜாட்டுஎன அழைக்கப்படுகிறார்கள்.

முக்கியப் பிரமுகர்

* நீதியரசர் முருகேசன், உயர்நீதிமன்ற நீதிபதி
* டாக்டர் சிவசாமி கவுண்டர்,MBBS,[தலைவர்,தமிழக விவசாயிகள் சங்கம்]
* ஓ ஆறுமுகசாமி கவுண்டர்,தொழில்அதிபர்
* R.வெள்ளிங்கிரி, [DSP ஓய்வு]

அரசியல் பங்களிப்பு

* தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த மறைந்த என்.நடராஜன் என்பவர் பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.

* தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த ஆர்.டி.கோபால் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.

* தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த என்.ராமகிருஷ்ணன் (மறைந்த என்.நடராஜன் சகோதரர்) கம்பம் சட்டமன்ற உறுப்பி்னராக இருந்து வருகிறார்.

* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த டி.டி.எஸ் திப்பையா அவர்கள் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.

* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த எம் சின்னராஜ் அவர்கள் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.

* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஏ.கே செல்வராஜ் அவர்கள் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.

* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த.கே.சின்ராஜ் அவர்கள் தற்போது மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினராக இருந்துவருகிறார்.

திரைப்படத் துறை பங்களிப்பு

தமிழ்த் திரைப்படங்களிலும் இச்சமூகத்தைச் சேர்ந்த சிலர் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளனர். அவர்களில் சிலர்;

* திரைப்பட இயக்குனர் ஆர். வி. உதயக்குமார்
* திரைப்பட தயாரிப்பு நிர்வாகி மற்றும் தயாரிப்பாளர் மல்லியம்பட்டி S மாதவன்
* திரைப்பட நடிகர் பீலிசிவம்
* திரைப்பட நடிகர் வெள்ளை சுப்பையா

ஒக்கலிகர் கல்வி நிறுவனங்கள்

ஒக்கலிகர் சமுதாயத்தின் / சமுதாயத்தைச் சேர்ந்தவரின் நிர்வாகத்திலுள்ள சில கல்வி நிறுவனங்கள்.

* ஆதி சுஞ்சனகிரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கம்பம்
* என்.எஸ்.கே.பொன்னையா கவுடர் மேல்நிலைப்பள்ளி, கூடலூர்.
* நஞ்சையன் லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, மேட்டுப்பாளையம்
* ஆதித்யா பொறியியற் கல்லூரி, கோயமுத்தூர்
* ஸ்ரீ விஜயலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிறுமுகை
* தி.துரைசாமி கவுண்டர் மேல்நிலைப்பள்ளி,சீளியூர்,கோவை மாவட்டம்
* தாசப்ப கவுண்டர் மாணவர்கள் தர்ம விடுதி, கோபி்செட்டிபாளையம்

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

இலவச கண் மருத்துவ முகாம்

நன்றி தினமணி
கம்பம்.நவ,20:   தேனி மாவட்டம், கம்பத்தில் மதுரை வாசன் கண் மருத்துவமனையும் , கம்பம் ஒக்கலிகர் காப்பு இளைஞர் பேரவையும் இணைந்து இலவச கண் மருத்துவ முகாமை நடத்தின. முகாமை கம்பம் சட்டப் பேரவை உறுப்பினர் என் ராமகிருஸ்ணன் துவக்கி வைத்தார்.  ஒக்கலிகர் இளைஞர் பேரவையின் துணைத் தலைவர் கண்ணா, முருகன் செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   வாசன் கண் மருத்துவமனை மருத்துவர் கணபதிராஜ் தலைமையிலான மருத்துவர்கள்  கண் பரிசோதனை செய்தனர். 200-க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. 50 பேருக்கு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
நன்றி தினமணி

புதன், 27 ஜனவரி, 2010

ஓகனேக்கல்

ஓகனேக்கல் பிரச்சனையில் தமிழகத்தின் பக்கம்தான் நியாயம் உள்ளது. இந்தத் திட்டத்தை கர்நாடகம் எதிர்ப்பதில் எந்தவித நியாயமும் இல்லை என்று முன்னாள் கர்நாடக அமைச்சர் நஞ்சே கெளடா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், நஞ்சே கெளடா கூறுகையில், உண்மை என்னவென்றால் போராட்டம் நடத்துபவர்களுக்கு இந்தத் திட்டம் குறித்துத் தெரியவில்லை.

இரண்டு மாநிலங்களுக்கு இடையேயோ அல்லது இரு நாடுகளுக்கு இடையேயோ ஒரு ஆறு ஓடினால், அதன் நடுவில் ஒரு கோட்டைப் போட்டு எல்லை பிரிப்பது என்பது சர்வதேச அளவில் உள்ள நடைமுறை.

அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள இன்னொரு நடைமுறை, ஆற்று நீரைப் பயன்படுத்தும்போது முதலில் முக்கியத்துவம் கொடுப்பது குடிநீருக்குத்தான். அடுத்து நீர்ப்பாசனத்திற்கும், பிறகு மின் உற்பத்திக்கும், போக்குவரத்துக்கும் பயன்படுத்துவார்கள்.

ஓகனேக்கல் திட்டம் முழுக்க முழுக்க குடிநீருக்கான திட்டம். மேலும், அந்தத் திட்டத்தை தமிழகத்திற்குட்பட்ட பகுதியில்தான் செயல்படுத்தப் போகிறார்கள். எனவே கர்நாடகத்தால் அதை எதிர்க்க முடியாது. எதிர்ப்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.

ஓகனேக்கல் முன்பு கோவை மாவட்டத்தில் இருந்தது. 1956ம் ஆண்டு கொள்ளேகால் கர்நாடகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் கொள்ளேகாலுக்கும், ஓகனேக்கலுக்கும் இடையே ஓடும் காவிரி ஆறுதான் இரு மாநிலங்களுக்கும் எல்லைக் கோடாக நிர்ணயிக்கப்பட்டது.

1998ம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதி குடிநீருக்காகத்தானே தவிர, மின்சாரத்திற்கான திட்டத்திற்கு அல்ல. எனவே தமிழகம் மின்சாரம் தயாரிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட முடியாது. அப்படி அவர்கள் மின்சாரம் தொடர்பான அணை கட்ட நினைத்தால் அதுகுறித்து கர்நாடகத்திடம் அறிக்கை தர வேண்டும். அப்படி இதுவரை எந்த அறிக்கையும், கடிதமும் கர்நாடகத்திற்கு வரவில்லை. எனவே அது குறித்த திட்டம் அவர்களிடம் இல்லை என்றே அர்த்தம்.

ஒருவேளை சொல்லாமல் கொள்ளாமல் தமிழகம் மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொண்டால் அதுகுறித்து சுப்ரீம் கோர்ட் செல்லலாம்.

உணர்ச்சிப்பூர்வமாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கோஷம் போடுகிறார்கள். இப்போது உள்ள பிரச்சினை தண்ணீர்ப் பங்கீடு தொடர்பானதே அல்ல. இது முழுக்க முழுக்க தமிழகம் தொடர்பான ஒரு விவகாரம். இதில் கர்நாடகத்திற்கு எந்த சம்பந்தமும் இல்ைல என்பதை உண்மை.

உண்மையில், ஓகனேக்கல் பகுதியில் உள்ள 700 ஏக்கர் பரப்பளவிலான ஒரு தீவு குறித்துத்தான் இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சினை உள்ளது. ஆனால் அதுகுறித்து யாரும் பேச மாட்டேன் என்கிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை.

இந்தத் திட்டத்தை தமிழக அரசு ஒத்திவைத்தது தேவையற்றது. பத்து வருடங்களாக கிடப்பில் போட்டிருந்தவர்கள், ஒரு மாதம் காத்திருந்து என்ன செய்து விடப் போகிறார்கள். உடனடியாக இந்தத் திட்டத்தை நிறைவேற்றி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் வசதி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக கர்நாடக ஆளுநரை அழைத்து, இந்தத் திட்டம் குறித்த உண்மையை கர்நாடக மக்களுக்கு விளக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும். அப்போதுதான் கர்நாடக மக்களுக்கு உண்மை என்ன என்பது தெரிய வரும்.

தவறாக வழிநடத்துபவர்களால் தவறான வழிக்கு யாரும் போய் விடக் கூடாது. வன்முறையில் இறங்காதீர்கள். அனைவரும் சகோதரர்கள். சகோதரர்கள் போல நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் நஞ்சே கெளடா.

பாமக கொடிபட்டொளி வீசிப் பறக்கிறது

நன்றி Oneindia Mobile தென் மாவட்டங்களில் காலூன்ற பல்வேறு பிரயத்தனங்களை ராமதாஸ் செய்து வருகிறார். ஆனால் திருச்சியைத் தாண்டி உள்ளமாவட்டங்களில் பாமகவுக்கென்று பெரிய சக்தி ஏதும் இதுவரைஉருவாகவில்லை. தென் மாவட்டங்களில் வன்னியர்கள்(வன்னியக் கவுண்டர்கள் என்றும் அழைக்கப்படுவது உண்டு) எண்ணிக்கை மிக மிக சொற்பமாக இருப்பதே இதற்குக் காரணம்.

இந் நிலையில் தென் மாவட்டங்களில் உள்ள ஒக்கலிக் கவுண்டர் இன மக்களை பாமக பக்கம் இழுக்க ராமதாஸ் தீவிர முயற்சிகள்மேற்கொண்டுள்ளார். ஒக்கலிக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மதுரை, தேனி மாவட்டங்களில் கணிசமாகஉள்ளனர்.

இவர்களை சந்தித்து வரும் பாமக பிரமுகர்கள் நீங்களும் வன்னியக் கவுண்டர்கள் தான், நம் இருவருக்கும் மொழி தான் வேறு, ஆனால் இருவருமே கவுண்டர்கள் தான். எனவே பாமகவுக்கு வரும் சட்டசபைத் தேர்தலில் வாக்களியுங்கள்.

உங்களது சமூகத்தையும் மேலே தூக்கி விடுகிறோம். பல்வேறு பலன்களும் கிடைக்கும் என்று கூறி வருகிறார்கள். பாமகவினரின்இந்த முயற்சிக்கு ஓரளவு பலனும் கிடைத்துள்ளதாம்.

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக, கம்பம், உத்தமபாளையம், சுருளி உள்ளிட்ட இடங்களில் பாமக கொடிபட்டொளி வீசிப் பறந்து வருவதைப் பார்க்க முடிகிறது. இதை கருத்தில் வைத்துத் தான் தென் மாவட்டங்களிலும்போட்டியிடுவோம் என ராமதாஸ் கூறத் தொடங்கியுள்ளார்.


Oneindia Mobile

உண்ணாவிரதம்

Oneindia Mobile
சுதந்திர போராட்ட தியாகிகள் உண்ணாவிரதம்
வியாழக்கிழமை, செப்டம்பர் 10, 2009, 17:41 [IST]

சென்னை: சென்னையில் மத்திய அரசுக்கு நிகராக தமிழக அரசும் தங்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரி சுதந்திர போராட்ட தியாகிகள் வரும் 18ம் தேதி உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் நலவாழ்வு இயக்கம் மற்றும் வாரிசுகள் சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை குழுவினர் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 18ம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கின்றனர்.

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நடைபெறவிருக்கும் உண்ணாவிரத போராட்டத்திற்கு சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் நலவாழ்வு இயக்க மாநில தலைவர் என்.துரை தலைமை வகிக்கிறார்.

தியாகிகள் நல சங்க தஞ்சாவூர் மாவட்ட தலைவர் வலம்புரித்தேவர், சென்னை மாவட்ட தலைவர் ஆண்டியப்பன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொன்னையா பிள்ளை, நெல்லை மாவட்ட தலைவர் சாவடி சொக்கலிங்கம், சென்னை மாவட்ட பொது செயலாளர் குருமூர்த்தி, தேனீ மாவட்டம் கதிரய கவுடர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

ஈமசடங்கு தொகையை உயர்த்த வேண்டும்...

அனைத்து தியாகிகளுக்கும் மத்திய அரசு வழங்கும் ஓய்வூதியத்தை போல் தமிழக அரசும் வழங்கிட கோரியும், மத்திய அரசு பென்சன் வாங்கும் தியாகிகள் இறந்தால் அதே ஓய்வூதியத்தை அவர்களது மனைவிமார்களுக்கு வழங்குவது போல் தமிழக அரசும் வழங்கிடவும், ஈமசடங்கு தொகை ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.

தியாகிகளின் வயது, முதுமை கருதி அவசர கால மருத்துவ சிகிச்சைக்காக தனியார் ம்ருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் முழு மருத்துவ செலவையும், மத்திய-மாநில அரசுகள் ஏற்கவும் தியாகிகள் அவரது வாரிசுகளின் நலன் கருதி காமராசர் மத்திய அரசு இசைவுடன் இட்ட மாநில அரசாணை 1430ஐ உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.

வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

முன்னாள் படைவீரர்கள் குடும்பத்திற்கு கல்வி உதவித் தொகை வழங்கிட வருமான வரம்பிலிருந்து விலக்களி்த்திருப்பது போல் தியாகிகளுக்கு விலக்கு அளிக்க கோரியும், தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கிட வேண்டும்.

தியாகிகளின் வாரிசுகளுக்கு தொழில்நுட்ப மற்றும் மருத்துவ கல்லூரிகளில் இடஓதுக்கீடு வழங்கிடவும், தியாகிகள் குடும்ப நல வாரியம் அமைக்கவும், வீட்டு மனை பட்டா, இரண்டு ஏக்கல் நிலம், அரசு மருத்துவமனைகளில் முன்னுரிமை வழங்கிட வேண்டும்.

சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை அரசு விழாவாகவும், விடுமுறை நாளாகவும் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடக்கவிருக்கிறது.

இதை சென்னை தியாகிகள் வாரிசுகள் சங்க துணை தலைவர் சந்திரன் துவங்கி வைத்து பேசுகிறார்.

தியாகிகள் வாரிசுகள் சங்க மாநில தலைவர் தவசிமுத்து, வாரிசுகள் நலவாழ்வு இயக்க மாநில பொது செயலாளர் ஜெயசீலன், தமிழ்நாடு காமராசர் பாசறை தலைவர் அய்யப்பன், ஆகியோர் கோரிக்கை விளக்க உறையாற்றுகின்றனர். கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த ஏராளமானோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

தேசிய மனித உரிமை, நுகர்வோர் உரிமை பாதுகாப்பு இயக்க தேசிய பொது செயலாளர் சுந்தரேசன் உண்ணாவிரதத்தை முடித்து வைக்கிறார். தியாகிகள் வாரிசுகள் நலவாழ்வு இயக்க மாநில செயலாளர் கதிரேசன் நன்றி தெரிவிக்கிறார்.
Click Here for Beautiful Skin!
Click Here for Beautiful Skin! »Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope

© Greynium Information Technologies Pvt. Ltd.

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

இலக்கியம்

  திரு.சு வேணுகோபால் . முக்கியமான இளம் தமிழ் எழுத்தாளர். இவரின் நுண்வெளி கிரணங்கள்  எனும் நாவல், மதுரை ஒக்கலிக் கவுண்டர்களின் வாழ்க்கைப் பதிவு.அருமையான நாவல். பூமிக்குள் ஓடுகிறது நதி . கூந்தப்பனை முதலிய சிறுகதை தொகுப்புகள் தமிழினி வெளியீடக வந்துள்ளன. மூன்றுதலைமுறை வரலாற்றை சொல்லும் பெரும் நாவல் ஒன்றின் பணியில் இருக்கிறார். மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆசிரியர் .

செவ்வாய், 12 ஜனவரி, 2010

பயணம்

   சென்னையில் உள்ள தமிழ்நாடு கல்விகாப்பு அறக்கட்டளையின் தங்கும்விடுதி
1.12.2008 முதல் தற்போதைய முகவரி 16/1.வித்யோதையா முதல் குறுக்குத்தெரு, அபிபுல்லா சாலை, தி.நகர்.முகவரியிலிருந்து சென்னை. கோடம்பாக்கம் கணபதி
அரசு உயர்நிலைப்பள்ளிக்கு அருகில் உள்ள புதுத்தெரு கதவு எண்  10/20 என்ற முகவரிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளது.பேருந்து நிறுத்தம்  கணபதி அரசு உயர்நிலைப்பள்ளி,கோடம்பாக்கம் நெடுஞ்சாலை.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்தும்,கோயமேடு புறநகர் பேருந்து [CMBT] நிலையத்திலிருந்து நேரடி பேருந்துகள் செல்கின்றன. இந்த தங்கும் விடுதியை  சென்னைக்கு அவசர வேலையாக வரும் நமது சமுதாய மக்கள்  பயன்படுத்திக் கொள்ளவும்
  

சனி, 9 ஜனவரி, 2010

தேனி செய்தி



  செப் 3-2009 அன்று பெரியகுளம் அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியில் காமுகுல ஒக்கலிகர் உண்டியோர் குல பங்காளிகளுக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீ வீரு தங்கம்மாள், ஸ்ரீ சந்தனம்மாள், ஸ்ரீ பெருமாள் சுவாமிகள் அடங்கிய அருள்மிகு பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி, தீபாராதனைகள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலையில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
 இவ்விழாவில் தேனி மாவட்ட ஆட்சியர் பி.முத்துவீரன், பெரியகுளம் கோட்டாட்சியர் எம்.சுப்பிரமணியன், தாசில்தார் பி.குமரேஸ்வரன் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 இதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை காமுகுல ஒக்கலிகர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.

வியாழன், 7 ஜனவரி, 2010

History of vokkaliga

India is known for its diversity of climate soils, vegetations, animals, peoples, cultures and languages. According to the British Historian abert of 56 kings who ruled the country 26 were kannadigas of okkaligas origin. They were considered as aborgins and belonged totamulic family is they were originated from the Himalayan range .Tamulic become Dravidian originated from Sanskrit after bishop Caldwell okkaligas (means oil-lamp) is not a caste in those days as Hinduism and the name denoted their origin from the milk dropping that were showered over the lingams by kamadenu and also by their profession of framing, they are also called as kamukula okkaliya kappu and ku.Kappu as they strictly followed the guidelines of the chief of the group.



The casteless communes of the human society in India un those days met a division perhaps with the invasion of Aryans and grouped into four social strata groups. Each of the stratum group was assigned with the particular work to do for the welfare of communes as honey bees and other social insects are doing without exploting each other. This system helped greatly to develop knowledge and skill among the group or family generation after generation, as there was no well-oaganized human society to any one irrespective of cast and creed for govermance of the society. The social system with the division of labour might have worked efficiently in those days when the population was minimum and is considered as the farunner for development of caste system in the country. This system-helped invasion by other, sloweo down the development and also paved the way of exploitation by a mighty one with in and outside the caste in the kaliugam. The okkaligas commune was also become one among several ‘castes’ in the society of India due to the influence of this system. The people of this community are living in different parts of India with a sizable population in Andra Pradesh, Karnataka and tamilnadu in the diverse habitats.

The history of okkaligas dates back to epic era of kieredha-tieredha-duvabaraugam.. They were born at the dawn of duvabaraugam from the milk dropinds of kamadenu lactated over lingams.. They were 48 in numbers named after their quality and physics leading a chaste,disciplined harmonious life in the forest area of the Himalayan range. These 48 person s (Table 1) aer consider as fore fathers of the morden okkaliya community. Among them avunavaru, Babavanaru, Basalenavaru, Emmenavaru, Dasalenavaru, Hundennavaru, Jaladennavaru, janakalinnavaru got married to none beautiful girls of shri Krishna Kula Nagakanni set of Yadhava community and rest of them were married to the offspring of these couples by strictly following the system of the brotherhood as decided earlier by gob nandhi perumal and had very pleasant life at this habitat..

The historical evidences show that the okkaligas lived in the region of punjap, rajapunthanam (rajasthan), delhi, Gujarat, Bengal and regions lying between ganga and yamunna rivers as farmers. It is painful to know that a hindu king chandragupta-II went against okkaligas through war that forced the foeceless okkaligas to migrate to other places in north. The hindu kingdoms in olden India were subsequently replaced by invading nawabs who were cruel to the hindu community. The arrocities committed on the hindu population by the nawabs of different regions of north and central India compled them to move to the thungabadra river area in the south through mazhava, birar , and bhamini stats nearer to golkonda lying on the south of the Krishna river after remaining for some periods at these places. The river thungabdra was in spate at the time of they arriavle and found difficult to cross. The prayers and sacrifice made by janakkallar enable them to reach other side of the river. According to the other version of the archeological department of coimbatore one of the chieftains, Jallathipparaya (Jallam=water, thipparaya=return back) was responsible for getting them to oyher side of Tungabadra River through his prayers and sacrifice. The crossing of the River was remembred on 18th of addi month of every year by conducting annual festivals and offering prayers to kula devathaigal. It is being followed even now to commemorate this event and also for the prosperity modern society knowingly or unknowingly to mark the event of sacrifice made on this day by jannakkalar that enableb his community people to cross the thungabadra river safely and flourished wherever they settled

They moved beyond Thungabadra River down South and settled in a group in aplacecalled NandanaHousur.According to The Hyderabad gazeteer and Arekaree Allakur Gazeteer kunchitikas population was found to exist at Godhavari rei\gion in A.D .8 and 10th centuries. The political and communal disturbances that possibly took place in latter date at Nandana Hosur forced many families of Okkaligas to leave to other places. According to the Etriographical suevey of mysore the kunchitika okkaligas were engaged in agriculture and armoury in the krishnadevarayar’s kingdom and some of them were moved to west (Maharastra region) in 1224 and to tamilnadu after thalaikottai war held in 1565. They were also emigrated to east (orissa, Bengal then called as Gowda Desam in those days) from thungabadra area for settlements. Wherever they went they architected an “ammasimane” in thein settlements and accommodated their Kula devathigal. The people of okkaligar community who settled in different places of south and from other states used to pry visit on pilgrimage to ammasimane and also contact jathri once in 12 years and offer their respective Kula Deities as preached by jannakkallar.

The names of the individuals of original 48 persons of okkaligas (Table 1) latter became the nam,e of Kulams (goth rams) to identify the generations developed through each of these individuals.The wives of these people where worishiped as family deitics latter eras at various settlements.

ஒக்கலிகர் புல்லடின் இதழ்






Kovai Mavatta Vokkaligar Mahajana Sangam
28, Alagesan Road, Coimbatore - 641 011
Tamilnadu. India


Phone 0422 - 2434393
Mail: support@dezignwhizgroups.com
Website: vokkaligar.org


Guidelines for Website Usage
Mobile: 98431 85545
Mail: tamil@dezignwhizgroups.com


Guidelines for Payment


* Donations may be sent to The President, Covai Mavatta Vokkaligar Podhunala Arakkattalai in the form of Cheque / DD, payable at coimbatore
* Cash payment acn also be accepted on receipt.
* The donation is exempted from Income Tax under 80G of the Income Tax Act, Govt. of India.

* Online Payment mode through Paypal will come soon

சனி, 2 ஜனவரி, 2010

சங்கமம்

                                                        கொங்கு கொடைவள்ளல் திருO.ஆறுமுகசாமி அவர்கள் பேசும்போது

   27.12.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை சுமார் 10:30 மணியளவில்ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கல்யாண மண்டபத்தில் கோலகலமாக தெடங்கியது, ஈரோடு,கோவை மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்கங்களின் 14 -ஆம் ஆண்டு தினவிழா.

சமுதாய இளைஞர்கள்,இளைஞிகள்,பெண்கள், கல்வியாளர்கள்,தொழில் அதிபர்கள்,சிறப்பு அழைப்பாளர்கள்,முதலிடங்களை பெற்ற பள்ளிகல்லூரி மாணவமாணவிகள், சமுதாயபெரியவர்கள் மற்றும் விவசாயிகள் என கூட்டம் அலைமோதியது.
                         தலைமை:திரு.V.R. திம்மராயப்பன்
                     [தலைவர் ஈரோடு மாவட்ட ஒக்கலிகர் மகா ஜன சங்கம்]
       சிறப்பு விருந்தினர்:திரு.O. ஆறுமுகசாமி
               [நிறுவனர் ஸ்ரீ விஜயலட்சுமி அறக்கட்டளை,கோவை.]
                வரவேற்புரை: திரு.A.M.சின்னராஜன்
                [செயலாளர் ஈரோடு மாவட்ட ஒக்கலிகர் மகா ஜன சங்கம்]

                              முன்னிலை
திரு. P.R.ராமசாமி தலைவர் கோ.மா.ஒக்கலிகர் பொதுநல அறக்கட்டளை
 கொடை வள்ளல் திரு O.ஆறுமுகசாமி தலைவர் ந.பொ.சங்கம்
திரு.T.R.அட்டியன்ணணன் Ex ஊராட்சி ஒன்றிய தலைவர்,TN பாளையம்
திரு.N.கிருஷ்ணசாமி இயக்குநர், இந்தோ ஸ்விஸ் சிந்தெடிக் ஜெம் (பி) லிட்
திரு.R.வெள்ளிங்கிரி தலைவர்,கோ,மா. ஒக்கலிகர் மகாஜன சங்கம்
                                 சிறப்பு அழைப்பாளர்கள்
திரு.P.L.சிவனப்பன் இயக்குனர், பண்ணாரி அம்மன் சக்கரை ஆலை
திரு.M. நடராஜ் இணை நிர்வாக அறங்காவலர், கல்வி காப்பு அறக்கட்டளை.
திரு.G.K. சுப்பிரமணியன் தலைமையாசிரியர் (ஓய்வு) T N பாளையம்
திரு.P.K.சந்திரன் இயக்குனர், சக்தி சர்க்கரை ஆலை,ந. புளியம்பட்டி.
திரு.Dr.M.R.சிவசாமி தலைவர்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
திரு.S.V.கிரி சொலவனூர்.
திரு.S.V. வெங்கிடு கட்டிட காண்ட்ராக்டர்,சத்தியமங்கலம்.
திரு.B.K. தாசப்பன் அறங்காவலர், தாசப்பகவுடர் ஹாஸ்டல் பங்களாபுதூர்.
திரு.K.T.சிவக்குமார் அறங்காவலர், தாசப்பகவுடர் ஹாஸ்டல் பங்களாபுதூர்
திரு.P.K.சுப்பிரமணியம் Ex ஊராட்சி மன்ற தலைவர், புதுப்பீர்கடவு.
திரு.Dr.K.லட்சுமணன் ஆசிரியர்,ஒக்கலிகர் புல்லட்டின்.
திரு. Dr.M. ரங்கசாமி தலைவர், ஸ்ரீ விஜயலட்சுமி அறக்கட்டளை கல்விக்குழு
திரு.M.சின்னராஜ் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்.
திரு.M.K.K. மோகன் கெளரவத்தலைவர், காரமடை ஒக்கலிகர் சங்கம்.
திரு.K.முத்துசாமி செயலாளர், நஞ்ஞையாலிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி.

திரு.B.N.ராஜேந்திரன்அறங்காவலர்,கோ.மா.ஒக்கலிகர்பொதுநலஅறக்கட்டளை.
திரு.A.ஈஸ்வரன் செயலாளர், கோ.மா.ஒக்கலிகர் பொதுநல அறக்கட்டளை.
திரு.N.மனோகர் பொருளாளர், கோ.மா.ஒக்கலிகர் பொதுநல அறக்கட்டளை.
திரு.T.சின்னசாமி பொருளாளர், கோ.மா.ஒக்கலிகர் மகாஜன சங்கம்.
திரு.R.M.சோமசுந்திரம் பொருளாளர், நண்பர்கள் பொதுப்பணி சங்கம்.
திரு.C.V.குமாரசாமி பொருளாளர், ஈ.மா. ஒக்கலிகர் மகாஜன சங்கம்.
திரு.C.R. செல்வராஜ் மாவட்ட ஊரட்சி உறுப்பினர்.
திருமதி.அருக்காணிராஜேந்திரன் மாவட்ட ஊரட்சி உறுப்பினர்.
திரு.சக்திவேல் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்.
திரு. சுப்பையன் தலைவர், ஊராட்சி மனறம் முடுக்கன்துறை.
திரு. C.R. தங்கவேல் தலைவர், ஊராட்சி மன்றம் சிக்கரசம்பாளையம்.
திரு.A.K.இளங்கோ தலைவர், ஊராட்சி மன்றம் கொமரபாளையம்.
திருமதி.சரஸ்வதி ராஜேந்திரன் தலைவர், ஊராட்சி மன்றம் புங்கார்.

திரு.ராஜாமணி சிவசாமி  தலைவர் ஊராட்சி மன்றம் பசுவபாளையம்.
திரு.P.A. மாரப்பன் உதவி தலைவர்,ஈ.மா. ஒக்கலிகர் மகாஜனசங்கம்.
திரு.V.R.யோகனந்தன் உதவி செயலாளர் ஈ.மா. ஒக்கலிகர் மகாஜனசங்கம்.
திரு.P.N. செல்வராஜ் உதவி செயலாளர் ஈ.மா. ஒக்கலிகர் மகாஜனசங்கம்.
திரு.M.கந்தசாமி துணைத்தலைவர்,கோ.மா ஒக்கலிகர் மகாஜனசங்கம்.
திரு.S.V.ராமசந்திரன் துணைத்தலைவர்,கோ.மா ஒக்கலிகர் மகாஜனசங்கம்.
திரு.T.முத்துசாமி துணை செயலாளர்,கோ.மா ஒக்கலிகர் பொதுநல அறக்கட்டளை.
திரு.காரை பொன்னுசாமி துணை செயலாளர்,கோ.மா ஒக்கலிகர் மகாஜனசங்கம்.

திரு.K.நஞ்சையன் துணை தலைவர்,நண்பர்கள் பொதுப்பணி சங்கம்.
திரு.R.சாம்ராஜ் துணை தலைவர், நண்பர்கள் பொதுப்பணி சங்கம்.
திரு.U.சோமசுந்தரம் துணை செயலாளர், ,நண்பர்கள் பொதுப்பணி சங்கம்.
திரு.R. ராமசாமி தலைவர், மேட்டுப்பாளையம் வட்டாரம்.
திரு.K.R.சுப்பையன் தலைவர், சிறுமுகை வட்டாரம்.
திரு. T.S ரங்கராஜ் தலைவர், தொண்டாமுத்தூர் வட்டாரம்.
திரு.S.நாராயணசாமி தலைவர், கிணத்துகடவு வட்டாரம்.
திரு.G.சுப்பையன் தலைவர், அன்னூர் வட்டாரம்.
திரு. G.சதானந்தம் தலைவர், கோவை தெற்கு வட்டாரம்.
திரு.V.S  தம்பு தலைவர், கணபதி வட்டாரம்.
திரு.R.ராஜாமணி கல்வி சேமிப்பு குழு உறுப்பினர், காரமடை.
சுரபி மக்கள் நலமன்றத் தலைவர், செயலாளர்,பொருளாளர்,உறுப்பினர்கள்.

                                             படத் திறப்பு
1.கல்வி வள்ளல் வீ.தாசப்பகவுடர் மாணவர் தர்ம விடுதி ஸ்தாபகர்.
2.தெய்வத்திரு.T.T.S. திப்பையா நிறுவனர், கல்விகாப்பு அறக்கட்டளை.
3.தெய்வத்திரு.P.S.வீரபத்திர கவுடர் Ex. ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்.
4.Dr.B.B.சுந்தரேசன் முன்னாள் துணை வேந்தர்,சென்னை பல்கலை கழகம்.

                            சமுக சிறப்பு கல்வியாளர்கள் 
Dr.R.K.சிவனப்பன் நீர்வள மேலாண்மை விஞ்ஞானி.
 Dr.A.M.நடராஜன் Chief Excutive Officer பண்ணாரி அம்மன் பொறியியற் கல்லூரி.
திரு.P.R.அருள்மொழி அரசு வழக்கறிஞர், கோவை.
Dr.M.சுப்பிரமணியம் பேராசிரியர், கோபி கலைக் கல்லூரி.
திரு.N.ஆறுமுகம் தலைமை பொறியாளர் (ஓய்வு),த.மி.வா.
திரு.R.பொருசப்பன் தலைமை பொறியாளர் (ஓய்வு) த.மி.வா.
திரு.K.ரங்கராஜ் மேற்பார்வை பொறியாளர் ,த மி.வா. 

Dr.P.சுப்பையன் பதிவாளர்,தமிழ் வேளாண்மை பல்கலைக்கழகம்.
Dr.R.பழனிச்சாமி பதிவாளர், அண்ணா பல்கலைக்கழகம்.
Dr.T.V.ரமனிகாந்த் ENT நிபுணர்,KMCH கொவை.
திரு.கனகராஜ் வழக்கறிஞர்,பு.புளியம்பட்டி.
திரு.R.பார்த்திபன், வழக்கறிஞர்,தூக்கநாய்கன்பாளையம்.
திரு.ரமேஷ் வழக்கறிஞர்,சிக்கரசம்பாளையம்.
திரு.M..L.ரங்கராஜ் wing comdr (Retd.) கோவை.

                                         சிறப்பு தொழில் அதிபர்கள்
திரு.T.C.சுகுமார் நிறுவனர், ஆதித்யா பொறியியற் கல்லூரி, கோவை.
திரு.R.ரவிச்சந்திரன்  ரோசன் TMT குருப்ஸ்,கோவை.  
திரு.R.இளங்கோ பண்ணாரி அம்மன் ஸ்டீல்ஸ்,கோவை.
திரு.S ராஜேந்திரன் கோயமுத்தூர் சூப்பர் அலாய்ஸ்,கோவை.
திரு.S.கனகராஜ் சுமேகா இண்டஸ்ட்ரீஸ்,கோவை.
திரு.R.சுரேஷ்குமார் பிரசன்னா கேஸ்,சத்தி.
திரு.N.சரவணபவன் கலா டெக்ஸ்,கோவை.
                                       பாராட்டு பெறுபவர்கள்  
திரு.S.மெளலீஸ்வரன் +2ல் முதல் மதிப்பெண் பெற்றவர்,பகுத்தம்பாளையம்.
திரு.T.N.வெற்றிவேல் "நம்மவர்கள்" பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர்.   
திரு.சிறுமுகை காரப்பன் நெசவு ஆராய்ச்சியாளர்,சிறுமுகை.
திரு.S.தமிழரசு www.vokkaligar.org. Website வெளியீட்டாளர்.
திரு.L.கனகலட்சுமி பட்டிமனற்ப் பேச்சாளர், கோவை.
                                         நன்றியுரை
திரு.T.N. பழனிச்சாமி செயலாளர்,கோவை மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்கம்.
                                      விழா தொகுப்பாளர்கள்
திரு.தேவேந்திரன் உதவி தலைமையாசிரியர்,ஆண்கள் மே.நி.பள்ளி,சத்தி.
திரு.R.ரத்தினசாமி தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி,தருமபுரி

                 தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே நிறைவுபெற்றது.